நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் அவலப்படுபவர்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016

வடக்கின் மூலமான போதைப் பொருள் மற்றும் கேரளாக் கஞ்சா போன்ற கடத்தல் நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. அதே நேரம், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன், எமது கடல் வளமும் அழிக்கப்பட்டு வருகின்றது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளைத் தடுக்கக்கூடிய வலுவான செயற்பாடுகளை அங்கு நிலைகொண்டுள்ள கடற்படையினர் மேலும் முன்னெடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி விவகார அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தற்போதைய அரசு எமது மக்களின் நிலங்களைப் படிப்படியாக விடுவித்து வருவது பாராட்டத்தக்கதொரு விடயமாகும். எனினும், எஞ்சியுள்ள காணிகளையும் விடுவித்தால் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற எமது மக்கள் நிம்மதியாகத் தங்களது வாழ்க்கையை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இவை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றைப் படிப்படியாகவும், விரைந்தும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், வடக்கில் பிரதான போக்குவரத்து வீதிகளில், சில இன்னமும் மக்களது பாவனைக்கு விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக,காங்கேசன்துறை – கீரிமலை வீதி, பலாலி – கீரிமலை வீதி, அரியாலை – அரியாலைத்துறை வீதி என்பவற்றை இங்கு குறிப்பிடலாம். தென் பகுதியைப் பொறுத்தமட்டில் பனாகொடை மற்றும் மின்னேரிய போன்ற பகுதிகளில் பாரிய இராணுவ முகாம்கள் அமைந்துள்ள போதிலும், அவற்றுக்கு முன்பாகச் செல்லும் பிரதான வீதிகள் மக்களது பயன்பாடுகளுக்கு விடப்பட்டுள்ளதைப் போன்று வடக்கிலுள்ள இவ்வாறான வீதிகளையும் இனங்கண்டு அவற்றை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

1551226054b4 - Copy

Related posts:

ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்த...
‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...

"எமக்கான எதிர்காலத்தை நீங்களே பெற்றுத்தரவேண்டும்" டக்ளஸ் தேவானந்தாவிடம் வட்டக்கச்சி மக்கள்...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...
கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூச...