வடமராட்சி கிழக்கில் ஒளி பாச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை!

Friday, December 2nd, 2022

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு  கடற்பரப்பில் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் ஒளி பாச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தமது பகுதி கடற்பரப்பில் குறித்த கடற்றொழில் நடவடிக்கையை சில தொழிலாளர்கள் முன்னெடுத்து வருவதால்  தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருவதாக  சுட்டிக்காட்டிவரும்  கடற்றொழில் சங்கங்கள் அதனை தடைசெய்யுமாறு வலியுறுத்தி வந்திருந்ததுடன் இவ்விடையம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கும்  கொண்டுசென்றிருந்தனர்.

இந்னிலையில் துறைசார் அதிகாரிகள்  மற்றும் கடற்படை அதிகாரிகள் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து இன்றையதினம் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் ஒளி பாச்சி சிறிய கண் வலைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிக்ள மற்றும் கடற்படையினர் இணக்கம் தெவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று (02.12.2022) முதல் குறித்த தொழில் நடவடிக்கைகள் தடை செய்யப்படுவதுடன்  அதனை மீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
……

Related posts:

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!
வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்...
ஆயுதமேந்திய போராட்டத்தின் வெற்றியே மாகாணசபை முறைமை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

புலம்பெயர்ந்த தமிழ் மக்களை திருப்பி அழைக்க வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக ...
சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் - அமைச்சர் டக்...