அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு நேற்றையதினம் வருகைதந்து சந்தித்த சாந்தனின் உறவினர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை தற்கொலை குண்டுதாரியை ஏவி கொலைசெய்த குற்றச்சாட்டில் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் நாடு திரும்பி தனது தாயாருடன் இறுதிக்காலத்தில் வாழ விரும்பியிருந்த நிலையில் சாந்தன் வீடு வந்து சேர்வதற்கு உதவுமாறு சாந்தனின் தாயாரும் சகோதரனும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து சாந்தன் நாடு திரும்புவதற்கு உரிய ஒழுங்கைகளை செய்வதற்காக அமைச்சரவையிலும் ஜனாதிபதியிடமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

உரிய நடைமுறைகள் நிறுவுற்று சாந்தன் நாடு திரும்பவிருந்த இறுதித் தருணத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தமிழ்நாட்டில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சாந்தன் தமிழ்நாட்டிலேயே மரணமானார்.

பின்னர் அவரது பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான காரியங்களையும் இறுதிவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உதவியுடனேயே செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்த உறவினர்கள் சாந்தனின் விடயத்தில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதில் மனித நேயத்தோடு அக்கறை காட்டிச் செயற்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு  சாந்தனின் உறவுகள் தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப விளையாட்டு த்துறையின் மேம்பாடு அவசியம் - டக்ளஸ் தேவானந்தா
நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலை...
மற்றுமோர் உலக சாதனை படைத்த திருச்செல்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌ...