ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப விளையாட்டு த்துறையின் மேம்பாடு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, July 9th, 2017

எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்பவதற்கு உடற்கல்வி உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதனூடாகவே சாத்தியமாகும். அதற்கு துறைசார்ந்தவர்களது பங்களிப்பும் காத்திரமானது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் (8) நடைபெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் நாட்டில் நிலவிய யுத்தசூழல் காரணமாக எமது மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு முகங்கொடுத்து வாழவேண்டிய துர்ப்பாக்கியநிலை இருந்தது. அக்காலப்பகுதியில் நாம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அந்த இறுக்கமான இக்கட்டான சூழ்நிலைகளிலும் எமது கல்வித்தரத்தை வீழ்ச்சியடையாது மேம்படுத்துவது தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டோம்.

குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவிடயங்களில் கவனத்தை செலுத்திய அதேவேளை கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை போன்றவற்றை வளர்த்தெடுப்பதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தோம். ஆனால் இன்று வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்விநிலை யுத்தம் முடிந்துள்ள சூழலிலும் கூட வீழ்ச்சிகண்டுள்ளமையை கண்டு மிகுந்த கவலையடைகின்றேன்.

எனவேதான் மாணவர்களின் கல்வித்துறை விளையாட்டுத்துறைகளை வளர்த்தெடுப்பதிலும் மேம்படுத்தவதிலும் நாம் தொடர்ச்சியாக உழைத்தவருகின்றோம்

இதேநேரம் வடக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சிகண்டுள்ள இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அக்கறையற்றிருக்கின்றமை குறித்து மிகுந்த கவலையடைகின்றேன் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்பவதற்கு உடற்கல்வி உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதனூடாகவே சத்தியமாகும். அதற்கு துறைசார்ந்தவர்களது பங்களிப்பும் காத்திரமானது என தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது உடற்கல்வி டிப்ளோமாதாரிகளாகிய தாம் தமது துறைசார் பட்டப்படிப்பை மேற்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாகவும் இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

Related posts:

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை - டக்ளஸ் ...
புதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்த த்தைவிடவும் மேம்பட்ட தாக அமைந்தால் வரவேற்போம்-  செயலாளர் நாயகம் டக்...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்!