எமது மக்களின் அவலங்கள் அகலும் நாள் விரைவில் – பளை பகுதியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2019

மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து அவர்களை சரியான வழிமுறை நோக்கி அழைத்து செல்வதே எமது நோக்கமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.
பளை வண்ணான் கேணி பகுதி மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் –

இப்பகுதி மக்கள் பல இடப்பெயர்வுகளை சந்தித்த மக்கள்.இதனால் அவர்கள் தமது வாழ்வியல் இன்னமும் இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்பாதுள்ள நிலைமையே காணப்படுகின்றது. ஆனால் இவற்றுக்கு தீர்வு கண்டு கொடுக்க வேண்டும் என ஆட்சி அதிகார்த்தில் இருக்கும் தமிழ் தரப்பினர் விரும்பவில்லை.

கடந்த காலத்தில் நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது எம்மால் முடியுமானளவு அபிவிருத்திகளையும் தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுதுள்ளோம்.

ஆனால் உங்களது வாக்குகளை அபகரித்து அரசியல் அதிகாரங்களை வைத்துள்ளவர்கள் உங்களை கண்டுகொள்ளாதுள்ளனர்இந்த நிலைமை மாறவேண்டும்.

இதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும்.
மக்களை வழிநடத்து பவர்கள் மக்களை பாதுகாப்பவர்களாக இருப்பதுடன் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் எமது தமிழ் தலைவர்கள் தங்களை மட்டும் பாதுகாப்பவர்களாக இருந்திருப்பதுடன் தங்களையும் அழித்தும் கொண்டுள்ளனர். இதனால் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் ஏராளம்.

ஆனால் நாம் மக்களை பாதுகாத்ததுடன் எம்மையும் பாதுகாத்ததால் தான் எமது மக்களுக்கு அதிகளவான சேவைகளை செய்து கொடுக்க முடிந்துள்ளது.

அந்தவகையில் நாம் கூறிய வழிமுறைகளே சாத்தியமானதென்பது நியமாகியுள்ளது.

வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் கூறும் வேட்பாளரான கோட்டபய ராஜபக்ச அவர்களை வெற்றிபெற செய்ய நீங்களும் பங்குதாரர் ஆகுங்கள்.

அந்த வெற்றியூடாக நான் உங்களது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகண்டு தருவேன் என்றார்.

Related posts:


தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை - டக்ளஸ் ...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...
சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வே...