கேப்பாப்பிலவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, February 17th, 2023

கேப்பாப்பிலவு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

சுமார் 475 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற கேப்பாப்பிலவு கிராமத்தில், 300 குடும்பங்கள் நந்திக்கடல் களப்பினை ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராம மக்கள் எதிர்கொள்ளும் மீன்பிடித் தொழில்சார் பிரச்சினைகள், பூர்வீக இடங்களில் குடியமர்தல், விளையாட்டு மைதானம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் பிரதேச மக்கள் இன்று  கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களும் உடனிருந்தார்.

000

Related posts:

வவுணதீவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஊடகவியலாளர் ...
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க துரித நடவடிக்கை வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதன் விளைவே குடிநீருக்கும் கோரிக்கை வைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது ...