அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் கோரிக்கை – வான்தோண்டி ஆழமாக்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, October 12th, 2023

மன்னார் மாவட்டம் அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்து கோரிக்கை தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் குறித்த பிரச்சினைக்கு தீர்வை காணும் வகையில் வான்தோண்டி ஆழமாக்குவது தொடர்பில்  அவதானம் செலுத்தியுள்ளார்.

இன்றையதினம் மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போது மன்னார் அந்தோனியார் புரம் கடல் தொழிலாளர்கள்  தமது படகு கட்டும் துறைமுகம்  ஆழம் குறைவாக இருப்பதினால் படகு கட்டுவதில் தொழிலாளர்கள்  எதிர்நோக்கும்  பிரைச்சனைகள் தொடர்பில்   அந்தோணியார் புரம்  கிராமிய மீனவ பெண்கள் அமைப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த துறைமுக பகுதிக்கு விஜயம் செய்து பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைமுகம் சேறும் சகதியுமாக இருப்பதினால் அதனை  வான்தோண்டி ஆழமாக்குவது தொடர்பில்   கவனம் செலுத்தினர் .

இதனிடையே ஈ.பி. டி.பி. கட்சியினால் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்களில் கட்சி செயற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்சிக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் நேற்றையதினம் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

காக்கைதீவு மற்றும் சாவக்காடு கடற்றொழிலாளர் சங்கங்களிடையே தொழில்சார் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கலந்துரையாடல்  ஒன்றும்  நேற்று இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசத்திற்கான பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்த இக்கலந்துரையாடலில் சம்ந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்து இரண்டு தரப்பிற்கும் பொதுவான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பு தவறானது என உறுதியானால் மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தா...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, இரத்து செய்யப்படாது - ந...
விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிப...