தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தோல்வி கண்டவர்கள் நாங்கள்- மணியந்தோட்டம் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காடு!

Monday, January 29th, 2018

உரிமை என்ற சொல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தேர்தல் காலத்தில் மட்டும் தான் பயன்படுத்துகின்றார்களே தவிர ஏனைய காலங்களில் அந்த சொல்லை மறந்துவிடுகின்றார்கள் என மணியந்தோட்டம் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டப் பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிவின் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்தகொண்ட மக்களே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் எந்தவிடயத்தை கையில் எடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நோக்குடன் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவ்வப்போது தமது தேர்தல் வெற்றிக்காக பொய் வாக்குறுதிகளை மட்டுமன்றி பொய் சுலோகங்களையும் வெளியிட்டு மக்களாகிய எம்மை ஏமாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாது உரிமை என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள் தமது தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு செயற்படுகின்றனர்.

இது அவர்களின் தேர்தல் கால உச்சரிப்பே அல்லாமல் தேர்தல் முடிந்ததன் பிற்பாடான காலப்பகுதியில் குறிப்பாக அடுத்த தேர்தல் வரையிலும் இந்த சொல்லை இவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு வாக்களித்து தோல்வி கண்டவர்கள் நாங்களே.  அந்தவகையில் இனிமேலும் அந்தத் தவறை நாம் விடுவதற்கு தயாராக இல்லை

மாறாக மாற்றுத் தலைமையின் தேவையை உணர்ந்துகொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்கு நிச்சயமாகப் பக்கபலமாக இருப்போம் என்றும் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்த தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா இது உங்கள் அனுபவத்திலிருந்து வெளிவரும் வார்த்தை என்பதால் இதற்கு சக்தி அதிகம் என்றே நான் கருதுகின்றேன் ஆதலினால் உங்களது எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் நாம் பக்கபலமாக இருப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:


தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுப்பில் வைத்திருக்க உத்தேசமா? -  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
உறுதியற்ற பொருளாதார கட்டமைப்பே பெரும் பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு...