இயல்புச்  சூழலை பாதிக்கும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை!

Saturday, July 22nd, 2017

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக படையினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் சம்பவங்கள் யுத்த நெருக்கடிக்குபின் இயல்பு சூழலுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் மீண்டும் பதட்டங்களை ஏற்படுத்தும் சம்பவங்களாகவே காணப்படுகின்றது.

வடமராட்சியில் பொலிஸார் மீது கல்வீச்சு, தென்மராட்சியில் இராணுவத்தினர் மீது வாள் வெட்டு என அடுத்தடுதது நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக இன்றையதினம் நல்லூரில் பொலிஸாரின் மீது துப்பாக்கிச்கூட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே போதைப்பொருள் விநியோக மார்க்கமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் வடமாகாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது மக்களை அச்சப்படுத்துவதோடு இயல்புச் சூழலையும் வெகுவாக பாதித்துள்ளது.

அரசியல் தலைமை என்று கூறுவோர் இளைஞர்களை தூண்டிவிடும் விதமாக தமது செயற்பாடுகளைக் கொண்டிருப்பதும் வன்முறையை வளர்த்துவிடுவதைப்போல் வழிகாட்ட முற்படுத்துவதும் குடாநாட்டு மக்களை மீண்டும் ஒரு விரும்பத்தகாத சூழலுக்குள் தள்ளிவிடுவதற்கு எத்தனிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தை வலுப்பெறச் செய்கின்றது என்பதுடன், இத்தகைய செயற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சி கண்டிக்கின்றது.

எனவே இயல்புச் சூழலை பாதிக்கின்ற இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன் மீண்டும் வன்முறைகள் தலைதூக்காதவண்ணம் அச்சமற்ற இயல்புச் சூழல் பாதுக்காக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Related posts:

சட்டங்கள் அமுலாக்கத்தையும்  அக்கறையோடு செய்யுங்கள் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
"மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துகின்றோம்" - தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வ ...
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களு...