மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 7th, 2018

திருகோணமலை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்தி வளர்த்தெடுப்பதற்கு கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் சவால்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொண்டு அர்ப்பணிப்புடன் உழைக்கத் தயாராக வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் வடபகுதியில் மட்டுமே எமக்கு சாதகமான சூழல் இருந்த காரணத்தால் நாம் தொடர்ச்சியாக எமது அரசியல் செயற்பாடுகளை அதிகளவில் வடபகுதியில் முன்னெடுத்து வந்துள்ளோம்.

ஆனால் கிழக்கு மாகாகணத்தைப் பொறுத்தளவில் மக்கள் எமது கட்சிக்கான ஆதரவை முழுமையாகத் தராத சூழலில் இங்கு தொடர்ச்சியாக எமது பணிகளை முன்னெடுக்கமுடியாது போனது .

ஆனாலும் கிழக்கு மாகாகண மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் எமது மக்கள் பணிகளை முன்னெடுக்க நாம் தயாராகியுள்ளோம். அதனடிப்படையிலே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்திலும் போட்டியிடுகின்றோம்

கடந்த காலங்களில் இம் மாவட்டத்தில் நாம் 10 இக்கும் மேற்பட்ட குடியேற்றத்திட்டங்களை உருவாக்கி எமது மக்களை அடிப்படை வசதிகளுடன் குடியேற்றியிருந்தோம். அன்று நாம் அவ்வாறு குடியேற்றாதிருந்திருந்தால் இன்று அந்த நிலங்கள் வேறு நபர்களிடம் கைமாறியிருக்கும் நிலை உருவாகியிருக்கும் என்றும் சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

இவ்வாறு மக்களுக்காக உழைத்துவரும் எமது பணிகளை பொறுத்துக்கொள்ளமுடியாத சில தமிழ் ஊடகங்கள் எம்மீது திட்டமிட்டவகையில் சேறுபூசும் நடவடிக்கைகளிலும் அவதூறுகளை சுமத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

ஆனாலும் எமக்கு மக்கள் முழுமையான ஆதரவை தரும்பட்சத்தில் ஏனைய கட்சிளைப்பார்க்கிலும் எமது கட்சியின் செயற்றிட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கட்சியின் ஆதரவாளர்களும் செயற்பாட்டாளர்களும்  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .

இங்கு பல கட்சிகள் போட்டியிட்டாலும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts:

தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாள...
வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம்...
வடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்கு வழங்க நிதி ஒதுக்கீடு - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனா...

வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்ப...
கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்!