எதிர்காலச் சந்ததிக்கு புலிக்குளம் வலுச்சேர்க்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 14th, 2021

புலிக்குளம் புனரமைப்பின் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருக்கும் புலிக்குளத்தினை புனரமைத்து பல்கலைக் கழகத்தின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதுடன், விவசாய பீடத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துவது தொடர்பான கோரிக்கை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவி்ன் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விடயம், அமைச்சர் சமல் ராஜபக்ஷவி்னால் துறைசார் இராஜாங்க அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, புனரமைப்புக்கான முன்னடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், புனரமைப்பு பணிகளின் போது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில்  ஆராயப்பட்டது.

பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டு இதன்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

குறித்த கருத்துக்களை கேடடறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புனரமைப்பு பணிகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய திட்ட வரைபினை சமர்ப்பிக்கமாறு பல்கலை கழக சமூகத்தினரைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், குறித்த திட்ட வரைபினை துறைசார் இராஜாங்க அமைச்சரிடம் சமர்ப்பித்து, புலிக் குளத்தின் புனரமைப்பினை எமது எதிர்கால சந்ததிக்கு பயன்படும் வகையில் வினைத்திறன் உடையதாக மாற்ற முடியும்  எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் ...
கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வர்த்தமானி வெளியீடு - சட்ட திருத்தங்கள் தொட...
தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை தீரா பிரச்சனையாக கொண்டு செல்லும் அரசியல்வாதி நான் அல்ல – தீர்வுகாண வ...

சரியான தீர்மானங்களை மக்கள் எடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!
அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட எமது மக்கள் வீதியில் இறங்கும் நிலையில் - நாடாளுமன்றில் சுட்...
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடருவதற்கு நீங்கள்தான் காரணம்: மக்கள் மீது குற்றச்சாட்டினார் அமைச்சர் ...