டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் – யாழ்ப்பாணத்தில் கோட்டபய ராஜபக்ச உறுதி!

Monday, October 28th, 2019


யுத்தம் முடிந்து சில ஒரு சில ஆண்டுகளில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் காங்கேசன்துறை, வளலாய், தொண்டமானாறு வரையான காணிகளை நாம் விடுவித்திருந்தோம். எஞ்சியிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி வந்தேன். அந்தகாணிகள் விடுவிக்கும் வரை அந்த காணிக்குரியவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதித்தேன். எனினும்,  2015 இல் நாம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதால் எஞ்சிய நிலத்தை எம்மால் விடுவிக்க முடியவில்லை. நாம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றதும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்  என ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று  நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய கோட்டபய ராஜபக்ச வணக்கம், தீபாவளி வாழ்த்துக்கள் என தமிழில் உரையை ஆரம்பித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அபிவிருத்தியை பற்றியே விசேடமாக பேசியிருக்கிறேன். அந்த விஞ்ஞாபனத்தில் விவசாயிகளிற்கு உரம், நிவாரணம் வழங்க, கடன்களை இரத்து செய்ய அதில் குறிப்பிட்டுள்ளேன்.

சுதந்திரத்திற்கு பின்னர் இருந்த அரசியல்வாதிகள் நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளை வழங்கியதால், உங்களிற்கு எம் மத்தியில் நம்பிக்கையில்லாமல் போயிருக்கலாம். அனால் நீங்கள் என்னில் நம்பிக்கை வைக்கலாம். நான் பொறுப்பேற்ற அனைத்தையும் 100 வீதம் நிறைவேற்றியிருக்கிறேன்.

நான் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உங்களின் பிரச்சனையை தீர்ப்பதாக கூறியிருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்களின் அனைத்து பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன்.

உங்களில் சில தலைவர்கள், இன்னும் உங்களை கடந்தகாலத்திலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். நான் எதிர்காலத்தை பற்யே சிந்திக்கிறேன். நான் உங்களிற்கு சகல சௌபாக்கியங்கழளையும் பெற்று தருவேன்.

நீங்கள் இங்கு காணும் அபிவிருத்தி அனைத்தும் மகிந்த ராஜபக்ச காலத்திலேயே நடந்தது. வீதிக்கட்டமைப்பு, புகையிரதம், மின்வசதி அனைத்தும் அவர்கள் காலத்திலேயே நடந்தது.

2009 இன் முன்னர் இங்கு பல இராணுவ முகாம்களும், இராணுவத்தினரும் இருந்தனர். ஆனால் 2009 இன் பின்னர் இராணுவம் இருந்த தனியார் காணிகளில் 90 வீதமானவற்றை விடுவித்தது நான். மக்களை முன்னிலைப்படுத்திய, மக்களின் விஞ்ஞாபனமாகவே இதை அமைத்துள்ளோம்.

மீனவ சமூகத்திற்கு கடன், படகு வழங்க, இளைஞர் யுவதிகளிற்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறென். இளைஞர்கள் தமான கல்வியை பெற்றுக்கொள்ளாததால் வேலையற்று பிரச்சனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனது அரசின் கீழ் தரம்மிக்க கல்விக்காக பாரிய கல்வியை வழங்குவேன்.

உயர்தரம் சித்தியடைந்து பல்கலைகழகம் போக முடியாதவர்களிற்கும் பல்கலைகழகம் போக வசதியேற்படுத்துவேன். சாதாரணம் சித்தியடைந்து உயர்தரம் சித்தியடையாத மாணவர்களிற்கு தொழிற்கல்வி, தொழில்நுட்ப,கைத்தொழில் அறிவை பெற்றுக்கொடக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

நாம் குறுகிய, நீண்டகால திட்டமாக நல்ல கல்வியை வழங்குவோம். அதை முடித்தவர்களிற்கு வெலைவாய்ப்பு கிடைக்கும் விதமான கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வொம்.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேற்றமடைய காரமாக இருந்தது அறிவு சார்ந்த பொருளாதாரம். இலங்கை இளைஞர் யுவதிகள் நல்ல திறமைசாலிகள். கணினி, தொழில்நுட்ப அறிவை அவர்களிற்கு வழங்குவோம். இந்தியாவிலும் இப்படியான திட்டங்கள் உள்ளன.

தகவல் தொழில்நுட்பம் சார்நத அறிவை மேற்கொள்ள கம்பனிகளை நிறுவ பெரும் முதலீடு செய்வோம். பொருளாதார விருத்தியை எற்படுத்த, இளையவர்களிற்கு வேலைவாய்ப்பை கொடுக்கவும் நான் ஆவனசெய்வேன். எல்லோரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

யுத்தத்தின் பின் வடக்கில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருதல் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்ச...
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும்...