கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இறங்கு துறையை புனரமைத்து தருமாறு மயிலிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிம் கோரிக்கை!

Sunday, November 15th, 2020

மயிலிட்டி துறைமுகத்திற்கு உட்பகுதியில் கடலரிப்பு ஏற்படும் அளவுக்கு அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் இறங்கு துறையின் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதற்கான பாதகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 90 க்கு முன்னர் இவ்வாறான நிலைமை  குறித்த துறைமுகத்திற்குள் இருந்ததில்லை என தெரிவித்துள்ள கடற்றொழிலாளர்கள் தற்போது துறைமுக தடுப்பணை சிதைவுற்று இருப்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளர்.

அந்தவகையில் தமது தொழில் நடவடிக்கைகளை பாதகாப்பான முறையில் மேற்கொள்வதற்கு குறித்த இறங்குதுறையை சீர்தருத்தி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: