காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம் வனத்துறைக்கு சொந்தம் என்றால் மக்கள் எங்கே குடியிருப்பது? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 18th, 2017

எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த காணி, நிலங்கள் பல வருட கால பாவனை இன்றிய நிலையில், மரங்கள் வளர்ந்து, காடுகளாகிவிட்டுள்ளன. இவ்வாறு, காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம், வனத்துறைக்கு உரியது என்றும், எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த கால்நடைகள் நடமாடும் பகுதிகள் எல்லாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உரியது என்றும், எமது மக்களது வரலாற்று வழிபாட்டு இடங்களை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, அது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என்றும் எல்லைகள் பல்வேறு துறையினராலும் போடப்பட்டு, கையகப்படுத்தப்பட்டால், எமது மக்கள் வேறு எங்கே போவது? என்றே கேட்க வேண்டியிருக்கின்றது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்களாக மொத்தமாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,

எமது நாட்டில் 19வது திருத்தச் சட்டத்தின் மூலமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர், அந்த ஆணைக் குழுக்களுக்குமாகச் சேர்த்தே நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

எமது நாட்டில்  சுயாதீனக் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர், அது தொடர்பில் பாரியதொரு எதிர்பார்ப்பு கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேற்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, சில மாதங்கள் வரையில் எமது மக்கள் மத்தியில் இருந்த அந்த எதிர்பார்ப்பானது, இன்று இருக்கின்றதா?

இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் எவை? சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்போம் எனத் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டனவா?  அல்லது, இதோ சுயாதீனக் ஆணைக்குழுக்களை ஸ்தாபித்துவிட்டோம் எனக் கூறுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டனவா? இந்த அரசைக் கொண்டு வந்ததாகக் கூறுகின்ற சிவில் அமைப்புகளின் வற்புறுத்தலுக்காக ஸ்தாபிக்கப்பட்டனவா? போன்ற கேள்விகள் இன்று எமது மக்கள் மத்தியில் ஏற்படும் வகையில் மேற்படி சில சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும் – என்றார்.

Related posts:

கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் - அம...
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் - கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு - சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்த...
இந்தியாவிலிருந்து சேவையை முன்னெடுக்க துரித நடவடிக்கை - பலாலி விமான நிலையம் – காங்கேசன்துறை துறைமுகம்...

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் ...
விடயங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் டக்...