செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள்!

Wednesday, October 17th, 2018

நிரந்தர தொழில்வாய்ப்பின்றி வாழ்வியலில் பல்வேறு அசௌகரியங்களை தாம் சந்தித்துவந்தபோது தமக்கான ஒரு அரச தொழில்வாய்ப்பை பெற்றுத்தந்து தமது வாழ்வில் ஒளியேற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருந்து அவரது வழிநடத்தலில் சமூகத்திற்கு முன்னுதாரணமாக சேவையாற்றி காட்டுவோம் என  யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் புதிதாக உள்வாங்கப்பட்ட ஊழியர்களில் ஒரு தொகுதியினர்  வருகைதந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பொன்னாடை போர்தி மாலை அணிவித்து கௌரவித்ததுடன் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எமது எதிர்கால சந்ததியினரது  சுபீட்சமான வாழ்வியலுக்காகவே நான் அயராது உழைத்து வருகின்றேன். இவ்வாறான தொழில்வாய்ப்புக்களை வேலையற்று மிக வறிய நிலையில் காணப்படும் எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்புடனேயே நான் இருக்கின்றேன்.

அது நிச்சயம் கைகூடும் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. இந்த வகையில் கடந்த காலத்தில் நாம் எவ்வாறு பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்து அவர்களது வாழ்க்கை முறையில் ஒளிமயத்தை ஏற்படுத்தினோமோ அது போன்று இன்னும் சில காலத்தில் அவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

இதற்கு எமக்கு அதிகரித்த அரசியல் பலம் வேண்டும். அதற்கான அரசியல் பலத்தை மக்கள் என்னிடம் வழங்குவார்களேயானால் நிச்சயம் மக்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை காண என்னால் முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் , கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், வலிகாமம் வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் உள்ளிட்ட முக்கியர்தர்கள்  உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20181016_184147 IMG_20181016_184000 IMG_20181016_183943 IMG_20181016_184724

Related posts: