ஒழுங்கமைக்கப்பட்ட இந்து அமைப்பு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா !

Saturday, November 26th, 2016

இந்து மத கற்கைகளைப் படித்தவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதுடன்இந்த எண்ணிக்கையும் வர வரக் குறைந்து செல்லும் நிலைமையே நிலவுகின்றதையும் காணக் கூடியதாக உள்ளது. இந்தப் பாரிய குறைபாட்டினை நீக்கும் வகையில் அரச பல்கலைக்கழகமொன்றில் இந்துக் கற்கைகள் சார்ந்த பீடமொன்றை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

எமது நாட்டைப் பொறுத்தமட்டில்இந்துமத கற்கைகளை உயர் மட்டத்திலும், சமூக மட்டங்களிலும் கற்பிப்பதற்கும், அதனது சிறப்பம்சங்களை எடுத்துக் கூறுவதற்கும் இந்து மத கற்கைகளைப் படித்தவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதுடன்இந்த எண்ணிக்கையும் வர வரக் குறைந்து செல்லும் நிலைமையே நிலவுகின்றதையும் காணக் கூடியதாக உள்ளது.

குறிப்பாகஇந்து சமய சிவாச்சாரியர்களைப் பொறுத்த மட்டில், அவர்கள் கோவில் பூசைகளிலும், புரோகிதத்திலும் ஈடுபட்டு வருவதால் சமய அறிவை அவர்களால் எமது சமுதாயத்திற்கு வழங்க இயலாதுள்ளது.

அதே நேரம் ஒழுங்கமைக்கப்பட்ட இந்து சமய கற்கை நிறுவனம் ஒன்று இல்லாமை காரணமாக, மக்கள் மத்தியில் சமயம் சார்ந்த அறிவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன்இந்து சமய அறிவைக் கற்பிப்பதற்குப் போதிய பயிற்றப்பட்ட ஆளணியும் இந்து மக்கள் மத்தியில் இல்லை என்பதையும் கௌரவ உயர் கல்வி அமைச்சர் அவர்களின் அவதானத்திற்குக் கொண்டு வருவதுடன்,

இந்தப் பாரிய குறைபாட்டினை நீக்கும் வகையில் அரச பல்கலைக்கழகமொன்றில் இந்துக் கற்கைகள் சார்ந்த பீடமொன்றை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்ற அனைத்துக் கல்விசார் மற்றும் கல்விசாரா ஆளணிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் பல்கலைக்கழகங்களை அண்மித்த வகையில் ‘பல்கலைக்கழக நகரம்’ என்ற பெயரில் அனைத்து வசதிகளையும் கொண்டதான நகரங்களை அமைக்கும் திட்டமொன்று கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது. அது மாணவர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாகவும் காணப்பட்டது. அந்தத் திட்டத்தினை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதை அறிய விரும்புகின்றேன்.

05

Related posts:


கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? - டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்த...
டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ள...