யாழ்.பல்கலை மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஈ. பி. டி. பி ஆதரவு!

Friday, March 15th, 2019

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தசர்வதேச விசாரணைகள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் முன்னெடுத்துள்ள விழிப்புனர்வு செயற்பாட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களை அணிதிரட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தமிழ் மக்களை வாக்களிச் செய்ததில் பல்கலைக்கழக் மாணவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

வாக்களித்த தமிழ் மக்களையும்,பல்கலைக்கழக மாணவர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றியதுடன், நம்பிக்கை துரோகத்தையும் செய்துள்ளதுடன்.  இன்று இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதிக்கான காலத்தை மேலும் காலதாமதப்படுத்துவதற்கு துணைபோய் நிற்கின்றது.

அரசுக்கு தாமே முண்டு கொடுத்துள்ளோம் என்றும்,அரசுக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுப்பதில் தமது பங்கும் இருக்கின்றது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே கூறி வருவதுடன், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தையும், நீதிக்கான போராட்டத்தையும் கூட்டமைப்பு காட்டிக்கொடுத்துள்ளது.

தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,இப்போது பின்கதவால் அரசிடமிருந்து தமக்கான சலுகைகளையும்,சுகபோகங்களையும் பெற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீராப்பிரச்சனைகளாக தொடரச் செய்துள்ளதாலேயே தமது பிரச்சனைகளுக்கான கோரிக்கைகளுக்கான தீர்வையும், நியாயத்தையும் முன்னிறுத்தி தமிழ் மக்கள் தாமே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கவும், அவர்களின் கோரிக்கைகளை  இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துரைக்கும் தமது பங்களிப்பைச் செய்யும் கட்டாயத்தில் பல்கலைக் கழக மாணவர்களும் வீதிக்கு இறங்கிப் போராடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை சுயநலமாக எவரும் அரசியல் சாயம் பூசி கொச்சைப்படுத்த வேண்டாம்.அரசியல் பேதங்கள் இல்லாமல் மாணவர்களின் முயற்சியை வரவேற்கின்றோம்.

Related posts:


தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
அலங்கார மீன் வளர்ப்பு தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - ...
புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர்...