இளைஞர் யுவதிகளுக்கு கரங்கொடுப்போம் கௌரவமான வாழ்விற்கு வழியமைப்போம்: வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை !

Thursday, July 30th, 2020


தமிழர் தேசத்தின் எதிர்காலமாக நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை எமது தேசத்தின் காலர்களாக மாற்றுவது தன்னுடைய எதிர்பார்ப்புக்களில் ஒன்று என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் நோக்கில் இன்று வவுனியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எமது பிரதேசங்களில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் எமது மக்களுடைய வாழ்வாதாரத்தினை அழித்திருக்கின்றது. அவ்வாறான அழிவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற நோக்குடனேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

குறிப்பாக இளைஞர் யுவதிகளுடைய எதிர்காலம் பற்றிய அச்சம் எமது மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதுதொர்பி்ல் எனக்கு முன்னர் உரையாற்றியவர்களும் குறிப்பிட்டிருந்தனர்.
எவ்வாறனினும், இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அழைப்பையேற்று பெருமளவான இளைஞர் யுவதிகள் திரண்டு வந்திருக்கின்றமை எமக்கு உற்சாகமளிக்கிறது. உங்களுக்கான எதிர்காலத்தை ஔிமயமானதாக மாற்றும் திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றது. அதனூடாக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தளவிற்கு வீணைக்கு வாக்களிதது ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை வலுப்படுததுகின்றார்களோ அந்தளவிற்கு மக்களின் அபிலாசைகள் விரைவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் வவுனியா மக்கள் மத்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: