சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Thursday, November 16th, 2023

மானுட விடியலை நேசித்து மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணம் ஆக்கியோருக்கு மரணமில்லை. அவர்கள் இறப்பினும் இறந்ததாக சொல்லப்படுவதில்லை,.. மாறாக,.. சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்கள் என்பதே அர்த்தம்,

தோழர் சங்கரையா இந்திய இடது சாரி இயக்க பெரு விருட்சத்தின் ஆணி வேர்களில் ஒருவர்.

சமூக நீதி, சமத்துவ உரிமை, தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்ற கோசங்களின் அடையாளமாக திகழ்ந்தவர்.

கால மாற்றத்திற்கு ஏற்றவாறு புரட்சிகர செயற்பாட்டு  எண்ணங்களை கொண்டிருந்தவர் எமது ஆரம்ப கால நீதியான உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தந்தவர்.

மாறாத தனது இடது சாரித்துவ வழி நின்று நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து முடித்தவர்,.. அவர் சிந்திப்பதை நிறுத்தினாலும் அவரது சிந்தனைகளும்செயலாற்றிய காரியங்களும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

தோழர் சங்கரையா அவர்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக எனது அஞ்சலி மரியாதை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க கூட்டு ஒப்பந்தம் தடையா? -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
பட்டி வலைகள் சட்ட விரோதமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி நெகிழ்வுப் போக்குடன் இருப்பதாகவும் அமைச்ச...
நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது - இதேநேரம் நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இட...

எமது மக்களின் வாழிடங்கள் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துக் கிடக்கின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...