மணலாறு – நெடுங்கெணி நெடுஞ்சாலை எப்போது அமையும்? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 26th, 2016

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான அதிகவேக நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டம் பற்றி முன்பு பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு திட்டம் ஏதும் முன்னெடுக்கப்பட உள்ளதா என்பதை அறிய விரும்புகின்றேன். அத்துடன், முல்லைத்தீவு மணலாறு தொடக்கம் நெடுங்கேணி வரையிலான நெடுஞ்சாலைப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதையும் அறிய விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில், அராலி – வேலணை பாதை அமைத்தல் – வேலணை – குறிகாட்டுவான் பாதை புனரமைத்தல் மற்றும் குறிகாட்டுவான் – நயினாதீவு பாதை என்பவை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  தென் பகுதியிலிருந்தும்  பக்தர்கள் பெருந்திரளாக நயினாதீவு நோக்கித் தினமும் வருகை தருகின்ற நிலையில்இந்தப் பாதை ஏற்பாடு இன்றியமையாததாகும் என்பதை இங்கு கௌரவ அமைச்சரின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அதே நேரம், கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் பல பிரதான பாதைகள் மீளப் பனரமைப்பு செய்யப்பட்டு, நவீன மயமாக்கப்பட்டுள்ள நிலையில்இன்னும் சில பாலங்கள், வீதிகள்  புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அந்த வகையில் யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில்,

பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதி,  சோரன்பற்று – தாளையடி வீதி, புத்தூர் – கந்தரோடை வீதி, புலோலி – கந்தரோடை– கச்சாய் வீதி,  யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, காரைநகர் சுற்றுவட்ட வீதி, யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதி, போன்ற வீதிகளும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன.

அதே நேரம் எமது பகுதிகளில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்ற போது ஏற்படுகின்ற மேடுகள் காரணமாக மழை நீர் வழிந்தோடக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை காரணமாக மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்த நிலையை வடக்கில் பல பகுதிகளிலும் காணக்கூடியதாக உள்ளது. எனவேஇவ்வாறான இடங்களில் உரிய கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இனிவரும் காலங்களில் நெடுஞ்சாலைகளை அமைக்கும்போது இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

004

Related posts:


இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
தலைநகரின் குடிசன மற்றும் வாகன நெரிசல்களை கட்டப்படுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி தெரிவிப்...
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்...