மன்னார் விரிகுடா எதிர்கொள்ளும் விவகாரங்களும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் – வங்காள விரிகுடா கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Wednesday, January 26th, 2022

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் முதலீடுகளை வரவேற்கின்றோம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் கடற்றொழிலாளர்கள் ஈடுபடுவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் உபகரண ரீதியான முதலீடுகளும் துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளை அமைப்பதற்கான முதலீடுகளையும் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்குகின்ற மனிதாபிமானக் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்கின்ற தன்னார்வ நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த தன்னார்வ நிறுவனத்தின் ஏற்பாட்டில் வங்காள விரிகுடாவுடன் தொடர்புபட்ட இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளுக்கிடையில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் எதிர்வரும் பெப்ரவரி 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பான முன்னாய்த்த சந்திப்பாக இன்றைய (26.01.2022) சந்திப்பு நடைபெற்றது.

மாளிகாவத்ததையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த, தன்னார்வத் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிராந்தியப் பணிப்பாளர் ஜே மின் வூ, இலங்கை கடற்றொழில் சார் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்புக்களையும் எதிர்கொள்ளப்படுகின்ற கடல்சார் சவால்களையும் தீர்க்கும் வகையிலான ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் வங்காள விரிகுடார் சம்மந்தப்பட்ட நாடுகளளுக்கு இடையில் ஏற்படுத்துவதே நோக்கம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வங்காள விரிகுடா சம்மந்தப்பட்ட நாடுகளின் கலந்துரையாடலில் மன்னார் விரிகுடா எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன் இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்ற அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகளினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமாக குறித்த கலந்துரையாடலை பயன்படுத்துவது தொடர்பான தனது எதிர்பார்ப்பினை வெளியிட்டார்.

மேலும், நீர்வேளாண்மை செயற்பாடுகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வருகின்ற வியட்நாம் போன்ற நாடுகளின் அனுபவங்களையும் தொழில்நுட்ப அறிவினையும் பகிர்ந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாவும் தெரித்ததுடன் பாரம்பரிய தொழில் முறைகளைப் பின்பற்றி வருகின்ற கடற்றொழிலாளர்களின் வருமானத்தையும் வாழ்கை தரத்தினையும் உயர்த்தும் வகையில் கடற்றொழில் தொடர்பான அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதிலும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, தன்னார்வ நிறுவனத்தின் தென்னாசிய நாடுகளுக்கான இணைப்பாளர் வில்லன் புன்ற், இலங்கை – இந்திய நற்புறவு அமைப்பின் பணிப்பாளர் அகமட் ஏ. ஜாவட் மற்றும் கடற்றொழில் அமைச்சர் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா, கடற்றொழில் அமைச்சின் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான  பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க ஆகியோரும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts:


எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத...
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமை...