கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை – 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Saturday, January 7th, 2023

கிராஞ்சி கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, உரிய ஆய்வுகளின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பித்துள்ள 127 பேருக்கும் பொருத்தமான இடங்களில் கடலட்டைப் பண்ணைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிராஞ்சியில் கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

முன்பதாக

வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குமாறு பூநகரிக் கடற்றொழிலாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அதனடிப்படையில், உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 83 பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு   கடலட்டைப்  பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. –

மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்க கூடிய திட்டங்களுக்கு எதிராக, குறுகிய நோக்குடன் எத்தகைய தடைகள் போடப்பட்டாலும் அனைத்தையும் தகர்த்து மக்களின் எதிர்பார்ப்பினை ஈடேற்றுவேன் என்று அடிக்கடி உரத்துக் கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பூநகரி கடற்றொழிலாளர்கள் உற்சாக வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் பிரமாண்ட வரவேற்பு: வீதியெங்கும் விழாக்கோலம்!
யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...
மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால் அங்குரார்ப்பணம்!