பாழடைந்த கிணற்றில் இருந்து வெடிப்பொருட்கள் சில மீட்பு

Monday, July 31st, 2017

காரைநகர், ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பாழடைந்த கிணற்றில் இருந்துவெடிப் பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன

பாவனைக்கு உதவாத வெடிப்பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்றை சுத்தப்படுத்தி கொண்டிருந்த பிரதேச மக்கள் முதலில் இராணுவ உபகரணங்களை அவதானித்தவுடன், கடற்படையினரிடம் தகவல் வழங்கியுள்ளனர்

பின்னர் கடற்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து அங்கிருந்து 14 கிளேமோர் குண்டுகள், 02 வெடி குண்டுகள் மற்றும் ஒரு அழுத்த குண்டும் மீட்டுள்ளனர். தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்