மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் – இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!
Sunday, January 2nd, 2022
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மற்றும் கனகராயன்குளத்தை அண்மத்த பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு மழை தொடரும் பட்சத்தில் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் சிறிய அளவில் நாளை திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Related posts:
நாளை முஸ்லிம்களின் புதுவருடம்!
2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க ...
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளைமறுதினத்துக்குள் நிறைவ...
|
|
|


