ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளைமறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!
Wednesday, August 28th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 7 இலட்சத்து 12 ஆயிரத்து 128 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை உரிய அரச அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தப் பணிகளுக்காக அஞ்சல் திணைக்களத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
எதிர்வரும் 26 ஆம் திகதி அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு!
அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு - விவசாய ஏற்றுமதி திணைக்களம்!
கொரோனா விதிமுறைகளை மீறினர் - திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
|
|
|
கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்ப...
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு - உலக வங்கியின் பிரதிநிதி...
நாடு முழுமையாக இன்னும் மீளவில்லை - முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென ...


