இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர் வலியுறுத்து!

Thursday, September 22nd, 2022

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய அவர், “அரிசி தட்டுப்பாடு உள்ளதால் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு நாடுகளில் இருந்து அரிசி கொண்டு வருகிறோம்.

இந்த அனைத்து அரிசிகளையும்விட, நம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி தரம் வாய்ந்தது. அச்சமின்றி கூற முடியும். உயர்தர அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த காலங்களில் பல நெல் வயல்களில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டது.

பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை. வேறு எந்த நாட்டிலிருந்தும் கொண்டு வருவதைவிட சந்தையில் கிடைக்கும் நம் விவசாயிகளின் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் - பரீட்சைத் திணைக்களம் அறிவிப...
மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் - அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அம...
இஸ்லாமிய மக்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாக புனித ரமழான் மாதம் அமைகின்றது - ஜனா...