சிறப்பாக நடைபெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!

Sunday, July 2nd, 2023

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹாற்சவத்தில் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக சிறப்பாக நடைபெற்றது.

நயினை நாகபூசணி அம்மனுக்கும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் என்பன இடம்பெற்று வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றது.

வருடாந்த மஹோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று மங்கள வாத்தியங்கள் முழங்க விநாயகப்பெருமான் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராயும் நயினை நாகபூசனி அம்மன் ஆகிய தெய்வங்கள் தனித்தனியே மூன்று தேர்களில் ஏறி வெளிவீதி வலம் வந்தனர்.

15 நாட்கள் கொண்ட மஹாற்சவ திருவிழாவில் இன்று தேர்த் திருவிழாவும் நாளை புனித கங்காதரணியில் தீர்த்ததோற்சவமும், மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நயினை நாக பூசணி அம்மனின் அருட்கடாச்சத்தினை பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: