மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிவிப்பு!

Tuesday, March 15th, 2022

மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூடப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை ஒன்பது வருடங்களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

குறித்த கடதாசி தொழிற்சாலை மூலம் வருடத்திற்கு 75 ஆயிரம் மெட்ரிக் தொன் கடதாசியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவருடன் உடன்படிக்கை செய்து இந்தத் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கக் கிடைத்தமை மிகவும் முக்கியமான விடயம் என்றும் மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் முதலீடுகளை மேற்கொண்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: