தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

Friday, June 28th, 2019

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா, இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டு வருகைதந்துள்ளார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி வெளிநாட்டு விஜயம் ஒன்றின்போது இடைநடுவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைத்தங்கலை மேற்கொண்டிருந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேச்சு வார்த்தையொன்றினை நடத்தியுள்ளார்.

இந்திய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்தல் மற்றும் இலங்கையில் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் தென்னாபிரிக்கா ஜனாதிபதி இதன்போது தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்ற வழியில் அவர் இன்று இலங்கை வந்திருந்தார். அவருடன் 20 பேரைக் கொண்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திருந்தனர். இந்தக் குழுவினரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து, விமானத்துக்கு தேவையான எரிபொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெற்றுகொண்டு, பி.ப.12 மணியளவில், தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், ஜப்பான் நோக்கி பயணித்துள்ளனர்.

Related posts: