துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களிற்கு வீடுகள் : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு!

Monday, November 21st, 2016

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழகக்  கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு   வீடுகளைக் கையளிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று திங்கட்கிழமை(21) திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஐயமொன்றைமேற்கொண்டனர். இதன் போது யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்  , பல்கலைக் கழக மாணவர்கள்,பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள்,பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

unnamed (1)

மேலும், கொல்லப்பட்ட நீதி நிலைநாட்ட உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் எனவும், மாணவர்களின்குடும்பங்களின் வாழ்வாதாரத்தினைப் பெற்றுக் கொடுப்பதுடன், பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கான தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக ஐனாதிபதி மற்றும் பிரதமர் மிகக் கூடிய அக்கறையுடனிருப்பதாகவும், அதற்குரிய தீர்வினை மிக விரைவில் பெற்றுத்தருவதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். எனினும், இராணுவத்தின் உதவியுடன் கட்டப்படும் வீடு தமக்கு தேவையில்லை எனத் தெரிவித்த சுலக்சனின் தந்தை, தமக்கு நீதியே வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

unnamed (2)

Related posts: