யாழ். மாநகரின் அக்கறையின்மையால் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது – யாழ்ப்பாண பழ வியாபாரிகள் குற்றச்சாட்டு!

Monday, June 29th, 2020

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாவட்டத்திலிருந்து வந்து பழவகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளால் உள்ளூர் பழ வியாபாரிகள் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் – “யாழ் மாநகர சபை எல்லைக்குள் பழ விற்பனையில் ஈடுபடுவதற்கு மாநகர சபைக்கு நாளாந்தம் 110 ரூபா செலுத்தி வருகின்றோம்.

ரம்புட்டான், அன்னாசி, மங்குஸ்தான் போன்றவை குறிப்பிட்ட பருவங்களில் மாத்திரம் கிடைக்கக் கூடியவை. அவற்றை நாம் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து சிறிய இலாபம் வைத்து விற்பனை செய்கிறோம்.

இவற்றை வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட வீதியோரங்களில் வைத்து விற்கின்றனர்.

இதனால் எமது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் யாழ் மாநகர சபை இது தொடர்பில் எதுவித அக்கறையும் காட்டாது அசமந்தமாக இருப்பதாகவும் உள்ளூர் பழ வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts: