உள்ளூர் இழுவைப் படகுகளால் நெடுந்தீவு மீனவர்கள் பாதிப்பு: யாழ்ப்பாண மீனவரைக் கட்டுப்படுத்துமாறு நெடுந்தீவு பிரதேச செயலர் கோரிக்கை!

Tuesday, June 20th, 2017

நெடுந்தீவுக் கடற்பரப்பில் உள்ளூர் மீனவர்கள் இழுவைப் படகுகளில் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம், குருநகர், பாசையூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் நுழைந்து இழுவைப் படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பிரதேச மீனவர்கள் பிரதேச செயலகத்துக்கு முறையிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் கொழும்பு அரசினால் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துபவர்கள் மீது நாம் சட்ட ரீதியில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம். எனினும் முன்னைய காலத்தில் 350இற்கும் மேற்பட்ட இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தன. கடற்றொழில் சமாசங்களுடன் கதைத்து அவர்களின் ஆதரவுடன் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தி வருகின்றோம்.

நாமும் சாமசமும் இணைந்து வற்புறுத்திய போதிலும் தமது கட்டளையை ஏற்காத சிலர் இழுவைப் படகுகளைத் தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறானவர்கள் மீது நாம் சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலமே நாட் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாகும்வரை கடற்றொழில் சமாசங்களுடன் இணைந்தே நாம் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த முடியம் என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts: