வாழைப்பழத்தின் விலை குடாநாட்டில் திடீர் வீழ்ச்சி

Tuesday, May 23rd, 2017

யாழ்.குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடிரென வீழ்ச்சியடைந்ததையடுத்து செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாம்பழம், பலாப்பழம், பப்பாசிப்பழம் போன்றவற்றின் காலம் ஆரம்பித்துள்ளது இவை சந்தைகளுக்குத் தாராளமாக வந்து சேர்கின்றன.

இதனால் வாழைப்பழத்தின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதாக செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். கதலி வாழைப்பழத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது. ஒரு கிலோ கதலிப்பபம் 25 ரூபாவாக விற்கப்படுகின்றது,

நீர்வேலி வாழைக்குலை விற்பனைச் சந்தைக்குப் போதியளவு வாழைக்குலைகள் வந்து சேர்கின்றன. நீர்வேலி, கோப்பாய், நவக்கிரி, சிறிபிட்டி, உரும்பிராய், ஊரெழு, இடைக்காடு, புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங்களில் இருந்தே அதிகளவான வாழைக்குலைகள் வருகின்றன. வாழைக்குலை விற்பனை வீழ்ச்சியைப் பயன்படுத்தித்  தென்பகுதிக்கு அதிகளவான வாழைக்குலைகள் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: