சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர்!

Sunday, May 12th, 2019

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவென ஒரு வருடகால வங்கிக்கடன் உதவியை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக ஒரு வருட கால கடனுக்கு 75 சத வீத வட்டிக்குறைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறித்த உதவிகளுக்கென அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் வக்கிரமரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கடந்த வருடங்களில் சுற்றுலாத்துறையின் வருமானத்தில் பெருமளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த வருடமும் சுற்றுலாத்துறையின் பெருமளவான வருமானம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையூடான வருமானத்தை இவ்வாண்டும் அதிகரிப்பற்கான முயற்சிகள் அனைத்தையும் அரசு முன்னெடுத்திருந்தது. எனினும் கடந்த மாதம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களால் அரசின் திட்டங்களில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சடுதியாக வீழ்ச்சியடைவதுடன் துறை சார்ந்தவர்களின் வருமானமும் மந்த நிலைமையை அடைகிறது. 30 வருட கால போரின் பின்னர் மீண்டு பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும் அனுபவம் எமக்கு உள்ளதால் இந்தப்பிரச்சினையிலிருந்து விரைவாக மீள முடியும் என எதிர்பார்க்கிறோம்.  சுற்றுலாத்துறை சார் ஊழியர்களும் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலைக்கு அமைவாக சுற்றுலாத்துறை வர்த்தகர்கள் ஊதவிகளை வழங்கவேண்டிய அவசியமும் எமக்குக்காணப்படுகின்றது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவடைந்நதால் இயல்பாகவே சுற்றுலாத்துறை வருமானங்களும் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன.  அவர்களுக்கான உதவிகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளதோடு அதற்கென அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

முதலீட்டு வட்டி வீதத்தை அறவிடாமல் இருப்பதற்கு அனைத்து வங்கிகளுடனும் கலந்துரையாடல் நடத்தத்தீர்மானித்துள்ளோம். இந்தக்கடன் உதவிகள் எதிர் வரும் மார்ச் மாதம் வரை ஒரு வருட காலத்துக்கு செல்லுபடியானதாக காணப்படும்

என்டபிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டத்தினுடாகவும் சுற்றுலாத்துறையினருக்கான கடன் உதவிகளை வழங்கத்தீர்மானித்துள்ளோம் – என்றார்.

Related posts: