திங்களன்று தேசிய தேயிலை விருதுவிழா!
Saturday, September 9th, 2017
2017 – தேசிய தேயிலை விருதுவிழாவிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் எதிர்வரும் திங்கட்கிழமையாகும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தேயிலைத் தொழில்துறையின் வளர்ச்சிக்காக ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களை கௌரவித்து விருது வழங்குவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது.
சிறந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர், சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர், சிறந்த தேயிலை கொழுந்தைப் பறிப்பவர்கள், சிறந்த தேயிலை நாற்றுக் கண்டுகளை உற்பத்தி செய்வோர் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார் சபாநாயகர்!
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் - பொலிஸ் ஊடக பிரிவு!
எரிசக்தி துறையுடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையா...
|
|
|


