இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார் சபாநாயகர்!

Friday, December 16th, 2016

‘இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டம்’ என்ற பெயரில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக சேவை வேலைத்திட்டமொன்று சபாநாயகரின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

5 கோடி 30 இலட்சம் ரூபா இந்த வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதியின் மூலம் மெக்ரோம் நடமாடும் பரிசோதனை இலங்கையில் அனைத்துப் பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இலங்கையில் உள்ள புற்றுநோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கினரை குணமாக்க முடியும். அத்தோடு மேலும் மூன்றில் ஒரு பகுதியினரை நோயிலிருந்து கட்டுப்படுத்த முடியுமென்றும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தியர் லங்கா ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த நிவாரண சேவை வேலைத்திட்டத்தின் கீழ் 12 கோடி ரூபா செலவில் குணமாக்க முடியாத புற்றுநோயினால் பாதிக்கப்படடுள்ள பிள்ளைகளுக்காக பாதுகாப்பு மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் புற்றுநோய் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக நாளாந்தம் 24 மணித்தியாலயமும் செயற்படக்கூடிய உடனடி தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவையொன்றும் எதிர்வரும் 27ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இதன் போது தெரிவித்தார்.

இந்த அனைத்து சேவைகளும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தினால் எந்தவித அறவீடுகளும் இன்றி இந்திரா ஜயசூரிய நிவாரண சிகிச்சை பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுமென்று சபாநாயகர் தெரிவித்தார். அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

b7e73dd5b96942ad27cf1d32d89e965c_XL

Related posts: