கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது – மன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019

இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின் முக்கிய தலைவர் சிலர் டுபாய் நாட்டிலேயே மறைந்திருப்பதாக தென்பகுதி ஊடகங்கள் அடிக்கடித் தெரிவித்து வருகின்றன.

அதேபோன்று, இலங்கையில் அதிகளவிலான போதைப் பொருள் வர்த்தகத்திலும் இந்த குழுக்களுக்கு பாரிய பங்களிப்புகள் இருப்பதாகவே ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன.

அந்தவகையில் இந்த மீள ஒப்படைத்தல் ஒப்பந்தங்களை நீங்கள் இப்போது செய்து கொள்கின்ற நாடுகளுடன் செய்து கொள்ள வேண்டாம் என நான் கூறவில்லை. செய்து கொள்ளுங்கள். அதேநேரம், சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுடனும் செய்து கொண்டால் இந்த நாடு இன்று முகங்கொடுத்துள்ள மிக முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரு முடிவினைத் தேடிக் கொள்ள முடியும் என்றே கூறுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1977ஆம் அண்டின் 8ஆம் இலக்க மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த மீள ஒப்பந்தத்தின் அடிப்படையில் மனிதப் படுகொலை, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, இலஞ்சம், கொள்ளை, அந்நிய செலாவணி மோசடி, ஆபத்தான போதைப் பொருள் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களையே ஒப்பந்தத்தினை மேற்கொள்கின்ற இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் கைது செய்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது. அதே நேரம் ஒரு நாட்டில் அரசியல் புகழிடம் பெற்றவர்களை கைது செய்வதற்கு இந்த ஒப்பந்தத்தினால் அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என்றே தெரிய வருகின்றது.

இந்த நாட்டில் இலஞ்சம் பெற்று, கொள்ளையடித்து, அந்நிய செலாவணி மோசடி செய்து, போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பியோடியவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். அவரவர் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன்.

அந்தந்நத நாடுகளுடனும் இந்த ஒப்பந்தத்தினை செய்யுங்கள். செய்து, அவர்களைக் கைது செய்து இங்கு கொண்டு வந்து, கொள்ளையடித்த இந்த நாட்டு மக்களின் பணத்தை பெற்று, இந்த நாட்டு மக்களை சுமையற்றதொரு வாழ்க்கையை வாழ விடுங்கள் என்றே நான் கேட்டுககொள்கின்றேன்.

Related posts:

குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர...
அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - நீர்வேலி கரந்தன் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!

களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டும் - கல்வி அமைச்சரிடம் டக்ளஸ் எம...
யாழ் நகர சிற்றங்காடி வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று...
ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்ச...