அமைச்சர் டக்ளஸஸின் எண்ணக் கரு – வடக்கின் நவீன சுற்றுலா மையமாகின்றது நெடுந்தீவு!

Friday, March 29th, 2024

தீவக பிரதேசத்தை குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தை இலங்கையின் சிறந்த சுற்றுலா மையமாக உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கரு தற்போது நடைமுறைசாத்தியமாகவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டவரைபின் பிரகாரம் (UDA ) தீவகப் பிரதேசங்களை குறிப்பாக நெடுந்தீவை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் தற்போது துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஓர் அங்கமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றது. 

குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்ட பதில் அரச அதிபர், மேலதிக அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண...
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? - நாடா ளுமன்றத்தில் டக்ளஸ்...
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சர...