கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மிதிவெடி விளிப்புனர்வு விசேட நிகழ்வு – அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, April 6th, 2024

வடக்கில் கறிப்பாக மகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முகமாலை கிராம அலுவலர் பிரிவில் மிதிவெடி அகற்றிய பகுதியை கையளிக்கும் செயற்பாட்டினை விரைவுபடுத்துவதன்மூலம் அப்பகுதியில் மக்களை மீளவும் விரைவாக குடியமர்த்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெறும் சர்வதேச மிதிவெடி தொடர்பான விளிப்புனர்வுக்கும் உதவிகளுக்குமான விசேட நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் மேலும் கூறுகையில் –

நீண்டகாலமாக கண்ணிவெடி அகற்றும் பிரச்சினை இருந்துவருகின்றது. அனாலும் இந்த நிறுவனங்கள் இதை விரைவுபடுத்தி தருவதற்காக ஆலோசனைகளுடனும் நிதி உதவியோடும் முன்வந்திரக்கின்றார்கள்.

அதேபோன்று ஆபத்தென்று தெரிந்தும் அதில்  தம்மை ஈடுபடுத்தி கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு முன்வந்திருக்கும் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்திதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை என்றும் நாம் மறவோம் - நன்றியுணர்வுடன் கூறும் இரணைதீவு மக்கள்!
புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்குதுரித தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக...