நான் கடற்றொழில் அமைச்சரானதன் பின்னர் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டி வருபவன் அல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 1st, 2023

நான் கடற்றொழில் அமைச்சராக ஆனதன் பின்னரே கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டி வருபவன் அல்ல. அதற்கு முன்னரே பல்வேறு அமைச்சு நிலைகளில் இருந்த போதும் கூட,ஆட்சியில் பங்கெடுக்காத காலங்களில் கூட எங்கள்  கடலும் நிலமும் வளமும் எமது மக்களுக்கே சொந்தமென்று களமிறங்கி செயலாற்றியிருக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதை முன்னுதாரணமாக கொண்டு சக தமிழ் கட்சி தலைமைளும் வினைத்திறனுடன் செயலாற்ற முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.

அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பிலான நாடாளுடன்றில்  நடைபெறும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இதயத்தில் சுத்தமிருந்தால் இலட்சியத்தில் சித்தமிருக்கும்,.. நடுக்கடலில் தத்தளிக்கும் எமது மக்களை காப்பாற்ற வாருங்கள்.

வடக்கிலே இருக்கின்ற சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் இருக்கின்ற ஒரு மூத்த உறுப்பினரின் தலைமையில், தமிழகத்துக்குச் சென்று, தமிழக முதலமைச்சர், கடல் வள அபிவிருத்தி அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் அநியாயங்களிலிருந்து வடக்கின் தமிழ் கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுமாறு கோர வேண்டும்.

இத்தகைய இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகள் காரணமாக ஏற்கனவே இந்திய கடற் பரப்பில் வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது இலங்கைக் கடற் பரப்பினிற்குள் வந்தும் வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது இலங்கைக் தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பினையே உண்டு பண்ணும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது கன்னியாகுமரி கடற்றொழிலார்கள வெட்ஜ் பாங் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதைப் போல், ஏனைய தமிழக பாண்டிச்சேரி, காரைக்கால், நாகப்பட்டிணம், இராமேஸ்வரம், மாவட்டங்களின் கடற்றொழிலார்களுக்கும் அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையவிட வேண்டாம் எனவும் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும், ஆழ்கடல் தொழிலுக்கான வாய்ப்புகளை தமிழக கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் அத்துமீறிய வருகையானது இலங்கையின் கடற்படையினரிற்கோ, தரைபடையினரிற்கோ உரிய பிரச்சினை அல்ல. வடக்கே வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான (சுமார் 56,740)இலங்கை தமிழ் மக்களது பிரச்சினை என்பதை இந்திய தமிழக அரசுக்கு உணர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும்,வடக்கு மாகாணத்திலே எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கருதி, ஏற்கனவே ஒரு சிலர் மாத்திரம் பயன்பெற்று வந்திருந்த கடலட்டைப் பண்ணைக் கைத்தொழிலை நாம் பரவலாக்கி இதுவரையில் பல நூற்றுக் கணக்கான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கியிருக்கின்றோம்

“பழையன கழிதலும் புதியன புகுதலும்”; என்ற அடிப்படையில் கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மை சார்ந்து நாம் பல்வேறு புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: