நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்குதுரித தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, October 15th, 2021

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  இடம்பெற்றது.

இதன்போது களப்பு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஒருசில கடற்றொழில் அமைப்புகளும் பிரதேச மக்களும் களப்பிற்கு சொந்தமான, கண்டல் தாவரங்கள் வளர்க்கப்படாத ஒரு பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அதேவேளை, அபிவிருத்தி திட்டத்தினால் கடலுக்கும் களப்பிற்கும் பாதுகாப்பை  ஏற்படுத்தும் கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமைினால், களப்பு அபிவிருத்தி பணிகள்  தடைபட்டுள்ளது.

இவ்விவகாரங்கள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்  கருத்துத்து  தெரிவித்த, அபிவிருத்தி திட்டத்திற்கு பொறுப்பான பிரதம பொறியியலாளர், நீர்கொழும்பு களப்பு பிரதேசமாக வரத்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது, கண்டல் தாவரங்கள் பரவி வியாபித்திருப்பதன் காரணமாக அப்பகுதிகளை வன பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியின்றி எவ்வித நடவடிக்கைளுக்கும் பயன்படுத்த முடியாதென தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரவித்த வனவள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கண்டல் தாவரங்களை அழிப்பதனால் கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுமெனவும் நீர்கொழும்பு களப்பை சுற்றியூள்ள கண்டல் தாவரங்கள் வன பாதுககாப்பு திணைக்கள கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அப்பகுதியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாதெனவும் அதற்கு புறம்பாக ஏதேனும் வாய்ப்புக்கள் இருப்பின் அதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அவதானம் செலுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்ட விடயங்களை உன்னிப்பாக அவதானித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமெனவும் அதற்கு தடையாகவுள்ள விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரும் இணைந்து கள விஜயமொன்றை மேற்கொண்டு, பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுமெனவும் அதன் ஊடாக திட்டப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துபைபை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலளர் திருமதி இந்து இரத்நாயக்க, நீர்கொழும்பு நகர மேயர் லன்ஸா, கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், கம்பஹா மாவட்டத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர், நீர்கொழும்பு பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

000

Related posts:


கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கம்: தீர்வு பெற்றுத் தருமாறு சண்டிலிப்பாய் மக்கள் டக்ளஸ் தேவானந்தா...
வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!