சந்தர்ப்பத்தை மக்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும் – திருமலையில் டக்ளஸ் எம்.பி!

Sunday, January 7th, 2018

எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைவாகவே நாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு சாதித்துக்காட்ட வேண்டும். கடந்த காலங்களில் கிடைக்கபெறாத வாய்ப்பொன்று எமக்கு இன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இதனை எமது கட்சியின் வெற்றிக்காக மட்டுமன்றி அதனூடாக மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துவதற்கு திடசங்கற்பம் பூணுவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாம் ஏனைய கட்சிகளைப்பார்க்கிலும் ஏன் வித்தியாசமானவர்கள் என்பதை இன்று வரலாறு நிரூபித்துள்ளது. நாம் ஒருபோதும் நடைமுறைச்சாத்தியமாகாத விடயங்களை மக்களிடம் கொண்டுசென்று அதனூடாக தேர்தலில் வெற்றிபெறுகின்றவர்கள் அல்லர்.

மாறாக நடைமுறை யதார்த்த விடயங்களை தெளிவுபடுத்தியே மக்களிடம் வாக்குக் கேட்கின்றோம். ஆனால் மக்கள் உசுப்பேற்றும், உணர்ச்சியூட்டும் பேச்சுக்களுக்கு எடுபட்டு தமக்கான தவறான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்வதனூடாகவே இற்றைவரை ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களது இந்தப் பொய்த்தனமும் போலித் தேசியவாதமும் இன்று மக்கள் மத்தியில் வெளிப்பட்டு அவர்களுடைய பொய் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

எனவே வரவுள்ள இந்த வாய்ப்பை எமது கட்சியின் வெற்றிக்காக நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும். அவ்வாறான ஒரு வெற்றியினூடாகவே எமது மக்களுக்கு பலவற்றை சாதித்துக்காட்டமுடியும் என்று நம்புகின்றேன்.

யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரான காலத்திலும் சரி மக்களுக்காக அச்சுறுத்தல்களுக்கும் அவதூறுகளுக்கும் முகங்கொடுத்து பெரும்பணிகளைச் செய்து சாதித்துக் காட்டியவர்கள் நாம். அந்தவகையில்தான் இன்று வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் எமது கட்சி மீதான ஆதரவுத் தளம் பல்கிப் பெருகி வருகின்றதை யாவரும் நன்குணர்ந்துள்ளார்கள்.

எனவே சந்தர்ப்பம் என்பது ஒருமுறைதான் வாசல் தட்டும் அதனை வரவேற்று மக்களாகிய நீங்கள் உங்கள் வாழ்வை எழுச்சியில் கொண்டுசெல்ல எமக்கு ஆதரவுப்பலத்தை தரவேண்டும். அதனை பயன்படுத்தி உங்களது வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முழுமையான பங்களிப்பை வழங்க நாம் காத்திருக்கின்றோம் என்றார்.

Related posts:

வீட்டுத் திட்டத்திலும் விரும்பாத சர்வதேச சர்ச்சை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...
பேசாலை காற்றாடி மின் ஆலை - மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு - விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு ...

எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், அதனை மக்களின் நலன்களிலிருந்து எதிர்கொள்வோம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது: மீட்டெடுக்க வழிவகை ச...
நாரா நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அம...