கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகள் – அமைச்சர் டகள்ஸ் வழங்கி வைப்பு!

Tuesday, October 12th, 2021

கடலில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை பழதடையாமல் பாதுகாப்பதற்கான ஐஸ் பெட்டிகள் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பூநகரி, நாச்சிக்குடா, கண்டாவளை மற்றும் பளை ஆகிய பிரதேசங்களில் நேற்iறையதினம் (12.10.2021) இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற கடலுணுவுகளின் வீதத்தினை குறைக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறிய படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சிறுதொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி வைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சிறு கடற்றொழிலாளர்களுக்கான மீன் பெட்டிகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் ஒருங்கிணைப்பாளர் வை. தவநாதன், கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதி மோகனகுமார் மற்றும்    பிரதேச கடற்றொழில் உத்தியோகத்தர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

குறித்த ஐஸ் பெட்டி ஒன்றின் மூலம் கடலில் பிடிக்கப்படுகின்ற சுமார் 100 கிலோ மீன்களை பல மணி நேரங்கள் பழுதடையாமல் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தமிழ் மக்களின் தேவைகளுள் இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கின்றது – அமைச்சர் டக்...
மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள் - பரீட்சார்த்த நடவடிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும்...

மக்களும் நாமும் எதிர்பார்த்தது போல உள்ளூராட்சி சபைகள் செயற்படாதுவிடின் எதிர்க்கத் தயங்கமாட்டோம் -  ச...
சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது - பூநகரியில் டக்ளஸ் எம...
தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்குவது தமிழ் தேர்தல் நாடகம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!