கிளிநொச்சியில் நாளை விசேட கூட்டம் – வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆராய அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Tuesday, October 27th, 2020


கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடனான விசேட கலந்துiராடல் ஒன்றுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கலந்துiராயாடால் நாளை(28.10.2020) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காலை 11.00 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துiராடலுக்கு கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகியவற்றின் மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள், அதேபோன்று குறித்த மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டிருக்கும் கொறோனா அச்சுறுத்தல் காரணமாக வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, கடலுணவுகளை வடக்கு மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளமையினால், கிடைக்கின்ற அறுவடைகளை விற்பனை செய்து கொள்வதில் பிரச்சiனைகள் எதிர்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான வழிவகைகளை ஆராயும் நோக்கிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விசேட கூட்;டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கூட்டத்தில் கலந்துகொள்ளிகின்றவர்கள் அனைவரும் சமூக இடைவெளிகளைப் கடைப்பிடிப்பதுடன் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts:


ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோ...
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல் பொருளாதாரத்தை வலுப்...