வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, January 23rd, 2023


வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்னொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்ற தமக்கு, நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருமாறு இதன்போது அமைச்சரிடம் குறித்த ஆசிரியர்கள்  வேண்டுகோள் விடுத்தனர்.

இதுதொடர்பாக தன்னால் ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்குமாறும்,  அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவித்தார்.- 23.01.2023

Related posts:


ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!
தடம் புரண்டுசெல்லும் எமது இளம் தலைமுறையை நல்வழிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - டக்ளஸ் தேவானந்...
ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்ப...