பாடசாலைகளுக்கான வகுப்பறை கட்டிடங்கள் அமைச்சர் டக்ளஸ் திறந்து வைப்பு!

Thursday, March 30th, 2023

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

அதனடிப்படையில், இணுவில் மத்திய கல்லூரி, மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் மற்றும் யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் இன்று(30.03.2023) திறந்து வைக்கப்பட்டன.

இணுவில் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்லூரி அதிபர் விடுத்த விளையாட்டு மைதான புனரமைப்பு கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், காலத்துக்கு காலம் மாற்றங்களை உள்வாங்குவது அவசியமானதும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று, மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க வித்தியாலய புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “பாடசாலையில் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருக்கும் இரண்டு கட்டிடங்களை புனரமைத்து தருமாறு பாடசாலை அதிபர் கோரியிருக்கிறார். நாடு இப்போதுதான் மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறது. எனவே சிறிது காலம் பொறுத்திருங்கள் படிப்படியாக நிறைவேற்றித் தருவேன்” என்றார்.

இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபரின் கோரிக்கையான தடுப்பு வேலி அமைப்பது மற்றும் விளையாட்டு மைதானம் தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இறுதி நிகழ்வாக, யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட. வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றிய அமைச்சர், வித்தியாலயத்தின் குறைபாடுகளைக் களைய குறைந்தது ஒன்றரை வருடங்களாவது கடக்க வேண்டும் என்வும் தெரிவித்திருந்தார்.

இக்கட்டிடங்கள் வடக்கு மாகாண சபைக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியின் மூலம் இ்க்கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 30.03.2023

Related posts:

வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்...
இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பு - இலங்கை, மாலைதீவு கடற்றொழில் அமைச்சர்...

‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...
அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி - ஜனாதிபதி தெரிவிப்பு!
தேசிய பாடசாலையாக பளை மத்திய கல்லூரி அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!