உணர்வுகள் மதிக்கப்படும்  என்று நம்புகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017

கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை வேண்டி நடத்துகின்ற போராட்டத்தில் சிங்களச் சகோதரர்களும் பங்கேற்கிறார்கள். காணாமற்போன தமது உறவுகளை கண்டறிவதற்காக எமது மக்கள் கிளிநொச்சியிலே மேற்கொண்டு வருகின்ற அறவழிப் போராட்டத்தில் தங்களது உறவுகள் காணாமற்போன சிங்களச் சகோதரிகளும் பங்கெடுத்து வருகிறார்கள். முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாக நடைபெற்ற உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தும் நிகழ்வில் ஒரு பௌத்த தேரர் மனித நேயத்துடன் கலந்து கொள்கிறார். இத்தகையதொரு நிலை மாற்று காலம் எமது நாட்டிலே இன்று ஏற்பட்டு வருகின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்கதொரு மாற்றமாகவே தெரிகின்றது.

தன்னைக் கெலை செய்ய வந்த தமிழ் இளைஞரையே மன்னிப்பு கொடுத்து விடுவித்த மனிதாபிமானங்கொண்டவர் ஜனாதிபதியாக இருக்கின்ற நாட்டில், எமது நாட்டில் யுத்தம் மிகக் கொடூரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாது ஓமந்தையில் போய் புலிகள் இயக்கத்துடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட மனிதாபிமானமிக்கவர் பிரதமராக இருக்கின்ற நாட்டில், எமது மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என்றே நான் நம்புகின்றேன். அந்த வகையிலேயே நான் இந்த தனி நபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன் என்பதை இங்கு தெரிவித்து விடைபெறுகின்றேன்.

Related posts:

விவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்...
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு - காலம் தாழ்த்தாது செயலில் இறங்க...
சரியான தெரிவுகளே அபிவிருத்தி திட்டங்களை முழுகையாக்கும் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!