அரசியல் பலம் அதிகரிக்கும்போ துதான் மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 1st, 2017

அரசியலில் நாம் பலப்படுகின்ற போதுதான் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை காணமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றுபவர்கள் தமது நியமனம் தொடர்பாக  சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரியான அரசியல் தலைமைகளை மக்கள் இனங்கண்டு அவர்களை தெரிவு செய்வதனூடாகவே மக்களது வாழ்வியலில் மேம்பாடு காண முடியும். அதை உணர்ந்து கொண்டு மக்கள் எதிர்காலங்களில் செயற்படுவார்களேயானால் அவர்களது வாழ்வியலை எம்மால் பல்வேறு வழிகளிலும் மாற்றம் காண செய்ய முடியும். வடக்கு மாகாண சபை என்பது ஒரு காமதென பசுவைப் போன்றது அதனூடாக மக்களுக்கான பல்வேறு மக்கள் நலம்சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுக்ககூடிய வாய்ப்புக்கள் இருக்கின்ற போதிலும் வடக்கு மாகாண சபையை தமதாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு இதுவரை எவ்விதமான பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்.

வடக்கு மாகாண சபையை நாம் கைப்பற்றியிருப்பேமானால் 3 தொடக்கம் 5 வருடங்களுக்குள் வளம் கொழிக்கும் பூமியாக நிச்சம் நாம் மாற்றியமைத்திருப்போம். ஆனால் அது செயற்திறனற்றவர்களுடைய கைகளுக்கு போனதன் காரணமா அது செயற்திறனற்றதாகவே காணப்படுகின்றது.

இச்சந்திப்பின் போது தமக்கான நிரந்நர நியமனம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் தொண்டர் அடிப்படையில் பணிபுரியும் நீர்ப்பாசன திணைக்கள பணியாளர்கள் தமது கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

இது விடயத்தில் தறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளரான வேலும் மயிலும் குகேந்திரன் (ஜெகன்) உடனிருந்தார்.

Related posts:

மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம் - தெல்லிப்ப ள...
யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள்...
பொழுதுபோக்குக்காக கதைக்கும் அரசியலை நான் செய்வதில்லை - நாட்டின் நிலையை உணர்ந்தும் செயற்படுவது அவசிய...