முழங்காவில் செபஷ்ரியார்புர மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுத்துள்ள கோரிக்கை!

Friday, March 6th, 2020

முழங்காவில் செபஷ்ரியார்புரம் கடற்றொழிலாளர்களது வழமான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

குறித்த பகுதிக்கு இன்றையதினம் வியஜம் செய்த அமைச்சர் அப்பிரதேச மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

சுமார் 53 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில் குறித்த ஒரு பொது மண்டபத்தை தவிர எந்தவொரு அரச அலுவலகமோ அன்றி கட்டடங்களோ இல்லாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன் இப்பகுதியின் போக்குவரத்து வீதிகள் பெரும் பற்றைகளால் மூடியுள்ளது. இதனால் பல துன்ப துயரங்களை நாம் நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றோம்.
இந்த அவல நிலையிலிருந்து எமது பகுதிக்கு விமோசனம் பெற்றுத்தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த அமைச்சர் காலக்கிரமத்தில் உங்கள் தேவைப்பாடுகளை நிவர்த்தெ செய்ய முயற்சிப்பதாக தெரிவித்ததுடன்
வரவுள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எமக்கு அதிகாரத்தை தாருங்கள் உங்கள் அனைத்து தேவைப்பாடுகளும் நிறைவுசெய்து தர நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்ற...
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...
இரணைதீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி – ஜனாஸா அடக்கம் ஓட்டமாவடியில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்...