நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்!

Thursday, October 29th, 2020

நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பு இன்று(29.10.2020) பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர்
பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு
ஆலோசனை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.

அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஒரு தொலைபேசி அழைப்பில் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய விடயங்களுக்கு கூட ஏனைய தரப்புகளால் த...
வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு - காலம் தாழ்த்தாது செயலில் இறங்க...

  பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோ...
இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் - அமைச்சர் டக்ளஸ் தேவான...
கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!